கொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம்இ 27ஆம் திகதிஇ திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படஉள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்த்திருந்தது.
இதன் பின்னர்இ குறித்த மாவட்டங்களில் மே மாதம் முதலாம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மட்டுமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்இ கொழும்பு கம்பஹா களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தாலும்இ அரச மற்றும் தனியார் துறையினரின் செயற்பாடுகளை மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பித்து செயற்படுத்தும் வகையில் உரிய சட்டங்கள் தளர்த்தப்பட்டு அதற்கான நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
திணைக்களங்கள்இ கூட்டுத்தாபனங்கள்இ சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள்இ தனியார் துறையினரின் தொழிற்சாலைகள்இ கட்டுமானத்துறைஇ சேவை நிலையங்கள்இ மரக்கறிஇ மீன் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை நடத்திச் செல்ல அரசாங்கத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தனியார் துறை நிறுவனங்களை காலை 10 மணி திறபதற்கு அரசாங்கத்தினால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் துறையினரின் நிறுவன பிரதானிகள்இ தமது நிறுவனங்களை மே 4ஆம் திகதி முதல் நடத்திச் செல்லும் முறை குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திணைக்களங்கள்இ கூட்டுத்தாபனங்கள்இ சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் தமது ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை மாத்திரமே சேவைக்கு அழைக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.