T24 Tamil Media
இலங்கை

ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்ட பின்னர் செயல்முறைப் படுத்தப்படவேண்டிய விடயங்கள் குறித்து அறிவுறுத்தல்

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட பின்னர் திணைக்களங்கள், வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் ஆகியன வழமையான கடமைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் உள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் பணிக்கு சமூகமளிக்க வேண்டும். நாட்டின் ஏனைய மாவட்டங்களில் உள்ள அரச நிறுவனங்களில் கடமையாற்றும் ஊழியர்களில் ஐம்பது சதவீதமானோர் கடமைக்கு திரும்ப வேண்டும்.

ஏனையவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியும் என்பதோடு யாரை வேலைக்கு அழைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் பொறுப்பு நிறுவன உயரதிகாரியிடமே உள்ளது. ஊழியர்களுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுப்பது அந்த நிறுவன உயரதிகாரியின் பொறுப்பாகும். அதேபோல் தனியார் நிறுவனங்கள் காலை 10 மணிக்கு திறக்கப்பட வேண்டும். மேலும் நிறுவனங்களின் தலைவர்கள் பணியாளர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்க வேண்டும்.

இதேவேளை பொது நிறுவனங்களின் இயல்பான செயல்பாட்டை முன்னெடுக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டுதல்களுடன் கூடிய சுற்றறிக்கை ஒன்றை ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி. ஜயசுந்தர வெளியிட்டுள்ளார்.

அதற்கமைய அமைச்சகங்களின் செயலாளர்கள், மாகாண தலைமைச் செயலாளர்கள், துறைசார் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள், கூட்டுதாபன தலைவர்கள் மற்றும் உள்ளுராட்சி நிறுவனங்களின் பொது முகாமையாளர்களுக்காகவே சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேலைத்தளங்களில் கொவிட் -19 வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தவும், பணியாளர்கள் வேலைக்கு வருவதற்கான வழிமுறையாகவும், மக்கள் கூட்டமாக ஒன்று கூடுவதை தடுக்கவும், வீட்டிலிருந்து தங்கள் கடமைகளைச் செய்யவும் நான்கு முக்கிய விடயங்களை உள்ளடக்கி இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அனைத்து அரசு நிறுவனங்களும் சமூக தூரம், முகம் கழுவுதல், கை கழுவுதல் மற்றும் பிற சுகாதார நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் அதேபோல் சேவை பெற வரும் பொதுமக்களின் கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகளை வழங்க வேண்டும்.

மேலும், அனைத்து வகையான திருவிழாக்கள், யாத்திரை, சுற்றுலாக்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றவை மீள அறிவிக்கும் வரை தடை செய்யவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் மக்கள் கூட்டமாக கூடுவதால் அது வைரஸ் பரவலை தடுக்க தடையாக இருக்கும் என கருதி அனைத்து மத விழாக்களுக்கும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முழுமையாக கட்டுப்படுத்தவில்லை என்பதால், ஜனாதிபதியின் ஊடக பிரிவு அனைவரையும் அனைத்து சுகாதார விதிமுறைகளுக்கும் கட்டுப்பட வேண்டும் என்றும், பொறுப்புடன் நடக்க வேண்டும் என்றும், ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்படும் போது பணிகளுக்காக வெளியில் செல்லுமாறும் அதனை தவிர வேறு தேவைக்காக வெளியில் நடமாடுவதை தவிர்க்குமாறும் முடியுமான வரை வீட்டிலேயே இருக்குமாறும் கேட்டுள்ளது.

இதேவேளை சமூகத்தில் கொவிட் 19 வைரஸ் பரவுவது குறைவடைத்துள்ளதால் நாட்டில் உள்ள மக்களின் அன்றாட வாழ்க்கையை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி கூறுகிறார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகும், சுகாதார அதிகாரிகள் அளித்த வழிகாட்டுதல்களை பொதுமக்கள் பின்பற்ற வேண்டியது கட்டாயமாகும் என சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more