T24 Tamil Media
இலங்கை

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பிரதான கடமையாகும்!

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது அரசின் பிரதான கடமையாகும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் முல்லைத்தீவு மற்றும் மொனராகலை ஆகிய பிரதேசங்களில் சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் தகவல் சேகரிப்பதற்காகச் சென்றவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.

இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதற்கு இனியொரு போதும் இடமளிக்கப்போவதில்லை என பதில் காவல்துறை மா அதிபர் தெரிவித்திருந்தார்.

நாட்டில் சட்டவிரோதமாக இடம்பெறுகின்ற செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு ஊடகவியலாளர்களுக்கு உரிமையுள்ளது. அந்த உரிமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட மாட்டாது எனவும், சமூக வலைத்தள ஊடகவியலாளர்கள் சிலர் பொறுப்புடன் செயற்படாவிட்டாலும் பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மிகவும் பொறுப்புடன் செயற்படுகின்றனர் எனவும் சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை அரசின் பிரதான கடமையாகக் கருதுகின்ற அதேவேளை, ஊடகவியலாளர்கள் தேவையான இடங்களுக்குச் சென்று சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தப்படுவது தொடர்பிலான உண்மைத் தகவல்களைச் சேகரிக்க முடியும் எனவும் சுற்றாடல் அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதற்கமைய ஊடகவியலாளர்களின் வாய்ப்புக்களை நாம் நீக்கப்போவதில்லை எனவும், அதற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்தவொரு நபருக்கு எதிராகவும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதிலிருந்து பின்வாங்கப் போவதில்லை , எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more