நாட்டில் ஏற்பட்டுள்ள உரத்திற்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் களஞ்சியப்பட்டுத்தப்பட்டுள்ள உரத்தினை ஏனைய பின்தங்கிய பகுதிகளுக்கு விநியோகிக்க முடியாத நிலை காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து நாட்டில் போக்குவரத்து துறை முற்றாக முடக்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவேஉரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், இதற்கு பதிலாக தற்போது இராணுவத்தின் உதவியுடன் தேவையான இடங்களுக்கு உரத்தினை விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.