விவசாயத்திற்கு தேவையான விதைகள் மற்றும் உரங்கனை மறைத்து, போலி பற்றாக்குறையை ஏற்படுத்துபவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு எச்சரித்துள்ளது.
இதன்படி, இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுப்படும் நபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, விதைகள் மற்றும் உரங்களை விநியோகிப்பதில் சிறிது தாமதம் ஏற்பட்டாலும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் அதை மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.