உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலில் உயிரிழந்தவர்கள் விவகாரத்தில் விளையாடுவதற்கு யாருக்கும் இடமளிக்க முடியாது என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற உதிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின்போது 250கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.