கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்தஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல்களைப்போன்று மற்றுமொரு தாக்குதலை நடாத்த திட்டமிடப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.
உயிர்த்தஞாயிறு தாக்குதல்களைப்போன்று மற்றுமொரு தீவிரவாத குண்டுத் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு இருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக காவற்துறை ஊடகப் பேச்சாளரும், காவல் அத்தியட்சகருமான ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.