T24 Tamil Media
இலங்கை

உத்தியோகத்தர்கள் முகக்கவசம் அணிந்து கடமையாற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும் – வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர்

கடமை நேரத்தில் உத்தியோகத்தர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணிந்து கடமையாற்றுவதை உறுதிப்படுத்துதல் வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

கொரோனோவை எதிர்கொள்வதற்கு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கொவிட்- 19 வைரஸ் கிருமியால் ஏற்படுகின்ற தொற்றுநோயாகும். இது உலகளாவிய ரீதியிலும், எமது நாட்டிலும் பரவி பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்த ஆபத்தான தருணத்தில் முக்கியமான பாதுகாப்பு நடைமுறைகளை வேலைத்தலங்களில் கட்டாயமாகப் பின்பற்றுவதனை உறுதி செய்து கொள்வதன் மூலமாகவே எம்மையும் எமது சமூகத்தையும் நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

1.பணியாளர்கள் பொதுமக்கள் தம்மை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்குரிய வழிகாட்டுதல்களை அலுவலக வாயிலில் காட்சிப்படுத்துதல் வேண்டும்.

2.வேலைத் தலத்தினுள் நுழைவதற்கு முன் பணியாளர்கள், வாடிக்கையாளர்கள் கைகளைச் சரியான முறையில் சவர்க்காரமிட்டுக் கழுவ அல்லது தொற்று நீக்கியை பாவித்து தூய்மைப் படுத்தவதைக் கட்டாயமாக்கவும்.

3.இதற்காக அலுவலகத்தின் நுழைவாயிலிலும்இ பொருத்தமான ஏனைய இடங்களிலும் கை கழுவும் வசதியினை ஏற்படுத்திக் கொடுத்தல் வேண்டும், அல்லது தொற்று நீக்கி பாவனையை உறுதி செய்தல் வேண்டும்.

  1. அலுவலகத்தின் அனைத்துப் பகுதிகளையும் தூய்மையாக பேணுவதுடன்; அலுவலகத்தின் மக்கள் அதிகளவில் ஒன்றுகூடும் பொதுப் பயன்பாட்டிடங்கள் மற்றும் தளபாடங்கள, கதவுக் கைபிடிகள, படிக்கைபிடிகள, இலத்திரனியல் உபகரணங்களை பொருத்தமான தொற்று நீக்கியை பாவித்து கிரமமாக அடிக்கடி தூய்மைப்படுத்தலும் வேண்டும்.

5.கூடுமானவரை அலுவலகத்தின் கதவுகள, ஜன்னல்களை திறந்து வைத்திருக்கவும்.

6.சேவை வழங்கும் இடங்களில் சேவை பெறுநர்களின் எண்ணிக்கையை அலுவலகத்தின் உள்ளேயும, வெளியிலும் மட்டுப்படுத்துவதுடன் அலுவலகப் பணியாளர்கள், சேவை பெறுனர்களுக்கிடையில் ஆகக் குறைந்தது 3 அடி இடைவெளி கட்டாயமாக்கப்பட வேண்டும்.

7.கடமை நேரத்தில் உத்தியோகத்தர்கள் சரியான முறையில் முகக்கவசம் அணிந்து கடமையாற்றுவதை உறுதிப்படுத்துதல் வேண்டும்.

8.மட்டுப்படுத்தப்பட்ட ஆளணியுடன் சேவைகளை ஒழுங்குபடுத்துவதோடு வேலை நேரங்களை பணியாளர்களுக்கு பொருத்தமான வகையில் அதிகளவானோர் ஒரே நேரத்தில் ஒன்று கூடாதவாறு தீர்மானித்தல் வேண்டும்.

9.பணியிடங்களில் ஒன்றுகூடல்களின்போது முக்கியமான அங்கத்தவர்கள் மாத்திரம் பங்குபற்றுவதையும் போதிய தனிநபர் இடைவெளியையும் உறுதிப்படுத்தல் வேண்டும். ஒன்றுகூடலின் பின் குறித்த பகுதி உடனடியாக தூய்மைப்படுத்தப்பட வேண்டும்.

10.ஒவ்வொரு சேவைகளையும் குறித்தொதுக்கப்பட்ட தினங்களிலும்இ நேரங்களிலும் திட்டமிட்டு நடைமுறைப்படுத்துவதுடன் பொருத்தமான ஊடகங்கள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தி மக்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்த்தல் வேண்டும்.

11.பணியாளர்கள் தமக்கு கொவிட் 19 நோயின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல், மூச்செடுப்பதில் சிரமம், தொண்டைநோவு போன்ற அறிகுறிகள் சிறிதளவேனும் இருந்தால் கடமைக்கு சமூகமளிப்பதை தவிர்க்கும்படி அறிவுறுத்தவும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more