T24 Tamil Media
இலங்கை

உதயன் பத்திரிகைக்கு எதிராக அங்கஜன் 100 கோடி இழப்பீடு.

யாழ்ப்பணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகைக்கு எதிராக 100 கோடி இழப்பீடு கோரி முன்னாள் விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் சட்டநடவடிக்கை எடுத்துள்ளார்.

தமது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாகக்கூறி முன்னாள் விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் ராமநாதன் உதயன் பத்திரிகை மீது 100 கோடி ரூபா இழப்பீடு கோரி தமது சட்டத்தரணியூடாக இவ்அறிவித்தல் அனுப்பி வைத்துள்ளார்.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணத்துடன் தொடர்புபடுத்தி முன்னாள் விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் மீது உண்மைக்கு புறம்பான செய்தியினை வெளியிட்டமை தொடர்பிலேயே இவ்இழப்பீடு கோரப்பட்டுள்ளது.

உதயன் பத்திரிகையின் உரிமையாளர் தேர்தலில் ஒரு வேட்பாளராக களமிறங்கும் நிலையில் எதிர்த்தரப்பு வேட்பாளராக அங்கஜன் இராமநாதன் உள்ளமையினால் அவர் மீது களங்கத்தை ஏற்படுத்தவே இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டு கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,

குறித்த பிராந்திய பத்திரிகையின் செய்திகளை புகைப்படமெடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்புவதற்கு திட்டமிட்ட வகையில் குறித்த பத்திரிகையின் உரிமையாளர் செயற்பட்டுள்ளதாக இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் உதயன் பத்திரிகை எவ்வித ஆதாரமுமின்றி செய்திக்கான அடிப்படையின்றி உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிட்டு தேர்தலுக்கான கபட நோக்கத்தில் அவதூறு ஏற்படுத்துவதாக குறித்த இழப்பீட்டு கடிதத்தில் பிரஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த தேர்தல் காலப்பகுதியை பயன்படுத்தி தமது கட்சிக்காரருக்கு, வெளிநாட்டிலும் உள்நாட்டிலுமுள்ள நன்மதிப்புக்கு குந்தகம் ஏற்படுத்துவதே குறித்த பத்திரிகை பிரசுரித்த செய்தியின் பிரதான நோக்கமாக அமைந்துள்ளதாக அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிட்ட காரணங்களால் குறித்த பத்திரிகை மீது நட்டஈடு வழக்குத் தொடர வழக்கெழு காரணம் எழுந்துள்ளதாக அங்கஜன் இராமநாதனின் சட்டத்தரணி அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

14 நாட்களிற்குள் தமது கட்சிக்காரருக்கு 100 கோடி ரூபா நட்டஈடு வழங்கத் தவறும் பட்சத்தில் குறித்த பத்திரிகையின் உரிமையாளர் மீது சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக அங்கஜன் இராமநாதனின் சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் தமது கட்சிக்காரருக்கு எதிராக கூற்றுக்களையோ அல்லது அவதூறு கருத்துக்களையோ கூறக்கூடாது என மேலதிக கோரிக்கையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இழப்பீட்டு கடிதத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஒரு சிலரால் யாழ். மாவட்ட செயலகத்திற்கு வழங்கப்பட்ட நிவாரணங்களை மக்களுக்கு வழங்காமல் அங்கஜன் இராமநாதனிடம் கையளிக்க உத்தரவிட்டிருந்ததாக உதயன் பத்திரிகை ஒரு சில தினங்களுக்கு முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.

எனினும், இச்செய்தியினை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் உண்மைக்குப் புறம்பானது மறுத்திருந்ததோடு, தன் மீது குற்றச்சாட்டுக்கள் இருப்பின் தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பகிரங்க சவால் விடுத்திருந்தார்.

எனினும், உதயன் பத்திரிகை நிர்வாகமோ, தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இதுவரை இதற்கு பதில் வழங்கவில்லை.

இந்நிலையிலேயே உதயன் பத்திரிகைக்கு எதிராக 100 கோடி இழப்பீடு கோரி முன்னாள் விவசாய பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் சட்டநடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more