ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஆணைக்குழு பொதுபலசேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக குற்றவியல் குற்றச்சாட்டுகளை சுமத்துமாறு ஆணைக்குழு நிபந்தனைகளை முன்வைத்துள்ளது
மேலும் அளுத்கம பேருவளையில் 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற வன்முறைகளிற்கு காரணமாகயிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஞானசார தேரருக்கு எதிராக ஆணைக்குழு குற்றவியல் நடவடிக்கைகளிற்கு அமைய நிபந்தனைகளை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது