இலங்கையில் கடந்தவருடம் ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடையதான சந்தேகத்தில் 119 பேர் காவற்துறை அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த காவற்துறை ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரட்ன இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். அத்துடன், குற்றப்புலனாய்வு பிரிவினரால் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடப்பட்டுள்ளது.