ஈஸ்டர் குண்டு தாக்குதல் இடம்பெற்ற காலப்பகுதியில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஆறாயிரம் வாள்கள் தொடர்பாக முறையாக உள்ளக விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றவாறாக கோரி, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்துள்ள ரிட் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இதன்போது, குண்டுத்தாக்குதல் தொடர்பாக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகள் தொடர்பில் தெளிவுப்படுத்த வேண்டும் என, பொலிஸ்மா அதிபர் சி.டிவிக்ரமரத்ன உள்ளிட்ட குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ள பாதுகாப்பு பிரிவின் பிரதானிகளுக்கு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
அத்துடன் குறித்த மனுவை மார்ச் மாதம் 05ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.