முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி நாட்டை உலுக்கிய உயிர்த்தஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டிலேயே முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ம் திகதி நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் புத்தளம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக, காவற்துறை ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்