கூட்டுத்தாபனங்கள் மற்றும் திணைக்களங்களின் இலஞ்ச மோசடி செய்பவர்களை உடனடியாக கைது செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவு பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பத்மினி வீரசூரிய கொழும்பு மற்றும் கொழும்பைச் சூழவுள்ள அரச நிறுவனங்களில் மட்டுமல்லாது நாட்டின் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய வகையில் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார் .
அத்துடன் மக்கள் அனைவரும் இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராகசெயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.