T24 Tamil Media
இலங்கை

இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை.

உலகையே உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ள இலங்கையைச்சேர்ந்த மாணவர்கள் சிலரை நாளை நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரனதுங்க தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் பிரசன்ன ரனதுங்க ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு நாடுகளிலும் தங்கியுள்ள இலங்கை மாணவர்கள் நாடு திரும்புவதற்கான கோரிக்கைகளை தூதரகங்களில் முன்வைதுள்ளனர்.

இதற்கமைய, நாடு திரும்ப முடியாத நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள மாணவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகள்கடந்த நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், நாளை 130 மாணவர்கள் நாட்டுக்கு அழைத்துவரப்பட உள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரனதுங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

இவ்வாறு நாட்டுக்கு அழைத்துவரப்படும் மாணவர்களை சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு அமைய தனிமைப்படுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மாணவர்களை நாட்டுக்கு அழைத்துவரும் இந்த நடவடிக்கைக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனங்கள் முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரனதுங்க குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, வெளிநாடுகளில் தங்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டுக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஶ்ரீலன்கன் எயார்லைன்ஸ் விமான சேவை பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more