நாட்டில் ஏற்பட்டுள்ள வறட்சியான காலநிலை காரணமாக பல பகுதிகளில் நீர் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் நீரை சிக்கனமாக பாவிக்குமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை பொது மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில் வறட்சியான காலநிலை காரணத்தினால் சில இடங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்படலாம் அல்லது குறைந்த அழுத்தத்தில் விநியோகிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கலப்பகுதியியல் பொதுமக்கள் அனைவரும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரப்பட்டுள்ளது. அத்தோடு இதற்கான வழிகாட்டல்களும் நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினால் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது .