உருமாறிய புதிய வகை கொவிட்19 வைரஸ் தொற்றானது பிரித்தானியாவில் இனங்காணப்பட்டு தற்பொழுது இலங்கையிலும் 4 பிரதேங்களில் கண்டறியப்பட்டுள்ளதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையியல் காலம் தாழ்த்தாமல் உரிய தீர்மானங்களை விரைவாக எடுக்கவேண்டுமென சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹன தெரிவித்துள்ளார்.
அவ்வாறில்லை என்றால் அடுத்த மாதத்திற்குள் நாடுமுழுவதும் பாரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்க கூடிய நிலைமை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகினற நிலையில் மாவட்ட ரீதியில்இனங்காணப்படும் தொற்றாளர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. அத்துடன் மரணங்களின் எண்ணிக்கையும் உயர்வடைந்து செல்கிறது.
இந்நிலையில் தொற்றுக்கான சரியான தீர்மானமொன்றை எடுக்காவிட்டால் இனி வரும் அடுத்த மாத காலத்திற்குள் நாடுமுழுவதும் நெருக்கடிக்கு உள்ளாக கூடிய நிலைமை ஏற்படும்.
எனவே நாட்டு மக்கள் அனைவரும் கொவிட் 19 தொற்றில் இருந்து பாதுகாப்பான நிலையில் இருப்பதற்கு துரிதமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அரச சுகாதார தரப்பினரிடம் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோஹன மேலும் தெரிவித்துள்ளார்.