T24 Tamil Media
இலங்கை

இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாது!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்தபோது, இலங்கைக்கு அழுத்தம் பிரயோகித்திருந்த இராஜதந்திர தூதுவர்களுக்கு மிகவும் கடுமையாக, எமது நாடு சுயாதீனத் தன்மையும் இறையாண்மையும் உடையது என்பதைக் காண்பித்திருந்தார்.

தற்போது அவரே ஜனாதிபதி ஆசனத்தில் அமர்ந்துள்ளார் எனவே, இலங்கை ஒருபோதும் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிபணியாது என்ற தீர்க்கமான உத்தரவாதத்தை வழங்குகின்றோம் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிப்பதற்கான செய்தியாளர் மாநாடு இணைவழி மூலம் இடம்பெற்றபோதே அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக தற்போதை அரசு எம்.சி.சி ஒப்பந்தத்தில் ஒருபோதும் கையெழுத்திடப் போவதில்லை என்று பல சந்தர்ப்பங்களில் உறுதியளித்துள்ளது. இம்மாத இறுதியில் நாட்டிற்கு வரவுள்ளதாகக் கூறப்படும் அமெரிக்க உயர்மட்டப் பிரதிநிதி இதனை நடைமுறைப்படுத்துமாறு அழுத்தம் பிரயோகித்தால் அரசின் நிலைப்பாடு என்ன?? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

2009இல் பிரிட்டன் வெளிநாட்டலுவல்கள் செயலாளரும், பிரான்ஸின் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரும் இலங்கைக்கு வந்து போரை நிறுத்துமாறு அழுத்தம் பிரயோகித்திருந்தனர். ஆனால், போர் நிறுத்தப்படவில்லை.

இந்நிலையில் தற்போதைய அரசு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேசத்தின் அழுத்தங்களுக்கு அடிபணியாது என்பதை உறுதியாகக் கூறுகின்றேன் என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more