நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட் 19அ ச்ச நிலைமை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் அந்த வகையில்கொரோனா தொற்றுக்குள்ளானவர்களுள் இன்று மேலும் 847 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 67,831 பேர் பூரணமாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 384 ஆக அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.