T24 Tamil Media
இலங்கை

இலங்கையில் மெல்ல மெல்ல தலை தூக்கும் எலிக்காயச்சல்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் எலிக் காய்ச்சல் நோயும் மெல்ல மெல்ல தலைதூக்கி வருவதாக சுகாதார துறையின் விபரங்கள் தெரிவிக்கின்றன.

எலிக்காய்ச்சல் நிலைமை குறித்து, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தகவல்களின்படி இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 1352 எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் 665 எலிக்காய்ச்சல் நோயாளிகளும், பெப்ரவரி மாதம் 453 நோயாளிகளும், மார்ச் மாதம் 188 பேரும் ஏப்ரல் மாதத்தில் இதுவரை 45  எலிக்காய்ச்சல் நோயாளிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினரின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் அதிகமான எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் இவ்வருடம் இரத்தினபுரி சுகாதார மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் அங்கு இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 273 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எலிக்காய்ச்சல் காரணமாக, வெலிசர கடற்படை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வெலிசறை கடற்படை தலைமையகத்தில் பணியாற்றிய கடற்படை வீரர் ஒருவர் கடந்த 25 ஆம் திகதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

ஹொட்டலில் தங்கியிருந்த ரஷ்யருக்கு கொரோனா.

T24 News Desk 4

ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களை அடுத்த வாரம் மீண்டும் திறக்க நடவடிக்கை.

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more