இலங்கையில் நாளாந்தம் 1000 பேருக்கு கொரோனா தொடர்பான பி.சீ.ஆர் பரிசோதனைகளை நடாத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பீ சி ஆர் பரிசோதனைகளுக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் குறித்த பரிசோதனையை விரிவுபடுத்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாளாந்தம் 1000 பரிசோதனைனளை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ய