இலங்கையில் ஊரடங்கை மீறிய 39 ஆயிரத்து 875 பேர் இதுவரை கைது.
இலங்கையில் ஊரடங்கு சட்டத்திற்கெதிராக செயற்பட்ட 39 ஆயிரத்து 875 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இ இவர்களிடமிருந்து 10 ஆயிரத்து 257வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்த்துறை ஊடகப்பிரிவு தெரிவித்தது.
இன்று திங்கட்கிழமை காலை ஆறு மணி வரையிலான 24 மணித்தியாலயத்திற்குள் மாத்திரம் 1இ309 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களிடமிருந்து 348 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி காவல்துறை ஊடரங்குச் சட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டது. மக்கள் தங்களது அத்தியவசிய தேவைகளை பெற்றுள்க் கொவதற்கு ஏற்றவகையில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுஇ பின்னர் மீண்டும் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்த காலப்பகுதியில் ஊரடங்கு விதிகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் இதுவரையில் 39 ஆயிரத்து 875 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடமிருந்து 10 ஆயிரத்து 257 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.