T24 Tamil Media
இலங்கை

இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு ஏற்படவில்லை.

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளதாக இலங்கை உணவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

அரிசி, பருப்பு, ரின் மீன் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, லங்கா சதொச, கூட்டுறவு விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் உதவியுடன் உணவுப் பொருட்களை மக்களுக்கு விநியோகிக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களூடாக நிவாரண விலையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் செயற்பாடு நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மொத்த களஞ்சியத்தை ஆராய்ந்து தேவையான அளவு உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய, தூதுவராலயங்களூடாக இணைப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதமொன்றுக்கு இரண்டு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தேவைப்படுவதாக உணவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ஜே.கிருஸ்ணமூர்த்தி குறிப்பிட்டார்.

நெல் அறுவடையின் பின்னர், தேவையை பூர்த்தி செய்வதில் எவ்வித சிக்கலும் ஏற்படாது என அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more