இலங்கையில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள கொரோனா ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 602 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நேற்று காலை 06 மணி முதல் இன்று காலை 06 மணி வரையிலான 24 மணி நேர காலப்பகுதிக்குள்ளேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், ஊரடங்கு காலப்பகுதிக்குள் 169 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு கொண்டு வரப்பட்டுள்ளன.
இதற்கமைய, கடந்த மார்ச் மாதம் 20 ஆம் திகதி பிற்பகல் 6 மணி முதல் இன்றைய தினம் காலை 06 மணி வரையிலான காலப்பகுதியில் 34 ஆயிரத்து 733 பேர் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், 8ஆயிரத்து 883 வாகனங்கள் இதுவரை பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு கைதுசெய்யப்படுபவர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கபபட்டும் என காவல்த்துறை ஊடகப்பேச்சாளர் ஜாலியசேனாரத்ன தெரிவித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.