இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,128 பேர் நாடளாவிய ரீதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த காலப்பகுதிக்குள் 303 வாகனங்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரை 41 ஆயிரத்து மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கவல்துறை ஊடகப்பேச்சாளர், காவல் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட முதல் இதுவரையான காலப்பகுதியில் 10,560 வாகனங்களைகாவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.