நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
ஆகவே, இன்று மாத்திரம் 45 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குளானவர்களின் எண்ணிக்கை 505 ஆக அதிகரித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள இருவர் இன்று வீடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், கொரோனாதொற்றுக்குள்ளான 120 பேர் குணமடைந்துள்ளதுடன், 378 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் 273 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.