காவற்துறை ஊரடங்குச்சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை 28,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 6 மணிமுதல் பிற்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் ஊரடங்கு உத்தரவை மீறிய 282 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 82 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவற்;துறையினர் தெரிவித்துள்ளனர். காவற்துறை ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படுத்தப்பட்ட கடந்த 20 ஆம் திகதி தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் 28,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.