இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் நான்காக உயர்வடைந்துள்ளது.
இதனை சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க உறுதிப்படுத்தியுள்ளார். இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்வடைந்துள்ளது.
இதுவரை 117 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். தொற்றுக்குள்ளானநிலையில் 151 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருவதோடு, 56 பேர் சிகிச்சைபெற்று வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானநிலையில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.