கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு கடந்த சில நாட்களாக நிதி மற்றும் பொருட்கள் அதிகளவில் கிடைக்கப்பெற்றுள்ளது.
கொவிட்-19 சுகாதார மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு சில நிறுவனங்கள் நிதியுதவி வழங்கியதுடன் சுகாதார உபகரணங்களும் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
குறித்த நிதி மற்றும் பொருள் நன்கொடைகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன.
அந்தவகையில்இ இலங்கை கட்டடக் கலைஞர்களின் நிறுவனத்தினால் 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதுடன் மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் 50 இலட்சம் ரூபாய் நிதி சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது .
அத்துடன்இ சீன வர்த்தகர்கள் குழுவொன்றினால் 50 இலட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட பெறுமதியுடைய சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டன.
சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு தற்போது வரை 737 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி கிடைக்கப்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.