T24 Tamil Media
இலங்கை

இலகுவழி பணப்பரிமாற்றல் சேவையூடாக பண மோசடி செய்த சந்தேகத்தில் ஒருவர் கைது!

காவல்துறை உத்தியோகத்தராக தன்னை அடையாளப்படுத்தி இலகுவழி பணப்பரிமாற்றம் எனப்படும் ஈஸிகாஷ் முறை மூலமாக வெவ்வேறு பிரதேச வர்த்தகர்களிடம் பணமோசடி செய்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கண்டி அங்கும்புர பகுதியைச் சேர்ந்த 32 வயதான சந்தேக நபர், வீரக்கெட்டிய பகுதி வர்த்தகர் ஒருவருக்கு கடந்த 5 ஆம் திகதி தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது தான் வீரக்கெட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எனவும், கடமைகளுக்காகச் சென்று கொண்டிருந்தபோது தனது வாகனத்தில் சிறு கோளாறு ஏற்பட்டதாகவும், அதனை பழுது பார்ப்பதற்காக பணம் தேவைப்படுவதாகவும் கூறி வர்த்தகரிடம் ஈஸிகாஷ் மூலம் பண மோசடி செய்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பகட்ட விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த வர்த்தகர் வீரக்கெட்டிய பிரதான காவல்துறை பரிசோதகர் கெலும் சங்கீத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து சந்தேகநபர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதேவேளை கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இவ்வாறு பல்வேறு பகுதிகளிலும் உள்ள வர்த்தகர்களிடமும் தன்னை காவல்துறை உத்தியோகத்தராக அடையாளப்படுத்தி இலகுவழி பணப்பரிமாற்றல் சேவையூடாக பண மோசடி செய்து வந்துள்ளதாகத் தெரிவித்துள்ள காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more