T24 Tamil Media
இலங்கை

இறுதி ஆசை நிறைவேறாமல் மரணமடைந்த முருகனின் தந்தை.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்துவரும் முருகனின் தந்தை வெற்றிவேல் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு யாழ்ப்பாண போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை தனது 75 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்கள் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதுடன் தமிழக அரசும் விடுதலை செய்யும் தீர்மானத்தில் உள்ளது.


எனினும், தமிழக ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் ஏழு பேரின் விடுதலையும் தாமதமாகி வருகிறது.
இந்நிலையில், முருகனின் தந்தை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு மிக அவசரம் என்று குறிப்பிட்டு முருகனின் சட்டத்தரணி நேற்று முன்தினம் இரவு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

அந்தக் கடிதத்தில், முருகனின்; தந்தை வெற்றிவேல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் உள்ள யாழ்ப்பாண போதானா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது.
தந்தையின் முகத்தைக் கடைசியாகப் பார்க்க சிறையில் உள்ள முருகனுக்கு மனிதாபிமான அடிப்படையில் காணொளி அழைப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.எனினும் குறித்த அனுமதி கிடைக்கவில்லை என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், முருகனின் தந்தை யாழ்ப்பாணம் போதான மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை மரணமடைந்தார். இறுதியாக தந்தையின் உடலையாவது ஒரு முறை பார்க்க காணொளி அழைப்பு அனுமதி வழங்க வேண்டும் என்று சட்டத்தரணி; மூலமாகச் சிறையில் உள்ள முருகனும் நாட்டில் உள்ள அவரின் குடும்பத்தினரும் தமிழக அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related posts

ஹ்ரானின் சகோதரர் மொஹமட் ரில்வானுக்கு வெடி மருந்துகளை விநியோகித்த ராசிக் ராஸா கைது.

T24 News Desk 4

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more