மதுபோதையில் இருந்த இரண்டு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற ஒரு பிரச்சினையின் போது துப்பாக்கி சூடு நடாத்திய சந்தேக நபர் ரீ-56 ரக துப்பாக்கியுடன் காவல்த்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்மாந்துறை காவல்த்துறை பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராமத்தில் நேற்று இரவு 9.30 மணியளவில் துப்பாக்கி சூடு ஒன்று இடம்பெற்றதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
26 வயதுடைய சந்தேக நபரையும் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டு மறைத்து வைத்திருந்த ரீ 56 ரக துப்பாக்கி மற்றும் 9 ரவையுடன் கூடிய ரவைக்கூட்டையும் காவல்த்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த சம்பவத்தின் போது இரு துப்பாக்கி வேட்டுக்களை சந்தேகநபர் தீர்த்துள்ளதாக காவல்த்துறையின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.