நாட்டில் கொவிட் 19 தாக்கமானது பரவிவருகின்ற நிலையில் புதிய வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த புதிய வைரஸ் தொற்றானது ஜனவரி 26 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கப் பெற்ற மாதிரிகளிலிருந்தே கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன் கொவிட் தடுப்பிற்கான ஜனாதிபதி செயலணியானது இலங்கையில் கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதற்கு முன்னரே கொவிட் அச்சுறுத்தலிலிருந்து மீள்வதற்கான முன்னேற்பாடுகளுக்காக தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது.
மேலும் உருமாறிய புதிய வகை வைரஸ் தொற்றானது தற்போது நாட்டில் சில பிரதேசங்களில் இனங்காணப்பட்டு அதன் கட்டுப்பாடுகளுக்கான நடவடிக்கை முன்னெடுக்க பட்டு வருகின்றது .
அதுமாத்திரமின்றி உருமாறியதும் தன்மைகளில் இருந்து வேறுபட்டதுமான 26 வகை வைரஸ் நாட்டுக்குள் கண்டறியப்பட்டுள்ளது அந்த வைரஸ் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த நிலையில் இனங்காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் முப்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச்செல்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொம்பைமடு , முழங்காவில் உள்ளிட்ட பிரதேசங்களிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையங்களிலேயே இவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களுடன் தொடர்புடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு , குறித்த நபர்களும் 21 நாட்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது .