இலங்கையில் இராணுவத்திற்கு படையினரை புதிதாக ஆட்சேர்ப்பு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தலைமையகம் அறிவித்துள்ளது.
இதில் 18 – 24 வயதுக்கு இடைப்பட்ட இலங்கை பிரஜைகள் இதற்கு விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு ஆண் , பெண் என இருபாலாரும் படையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அத்துடன் யாழ், வன்னி, கிழக்கு, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மேற்கு மற்றும் மத்தி ஆகிய பாதுகாப்பு படை தலைமையகங்களில் ஆட்சேர்ப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ளும் பயிலுனர்கள் ஆட்சேர்ப்பு செய்யும் பணிப்பாளர் சபை, இராணுவ முகாம், பெப்பிலாயான மாவத்தை, கொஹூவலை (011-2815080/011-3137553) என்ற முகவரியில் அனைத்து ஆட்சேர்ப்புக்களுக்குமான விசாரணைகள் இடம்பெறும் என்றும் இராணுவ தலைமையகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .