இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன திருட்டுத்தனமாக ஆளும் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மக்களுடன் நேரடியாக தொடர்புகளை பேணுவதன் காரணமாகவே கொரோனா தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டது.
மேலும் சுகாதார சேவை ஊழியர்கள், பாதுகாப்பு சேவை ஊழியர்கள், காவற்துறை உள்ளிட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .