தாம்புள்ளை பகுதியில் தனது ஒருவயது மகனுக்கும் மூன்று வயது மகளுக்கும் விஷம் கொடுத்து தானும் அதை அருந்தி தற்கொலைக்கு முயன்ற தாயும் அவரது இரண்டு பிள்ளைகளும் மீட்கப்பட்டு தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
குறித்த பெண்ணின் கணவர் பொலநறுவையிலிருந்து தம்புள்ளை பகுதிக்கு வந்து தற்காலிகமாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் கார் சாரதியாக பணிபுரிந்து வருகிறார்.
நஞ்சை அருந்திய நிலையில் மூவரும் வீதியோரம் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து உள்ளூர்வாசிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் தனது இரண்டு குழந்தைகளையும் விஷம் வைத்து கொல்ல முயன்ற தாயார் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தம்புள்ளை காவற்துறையினர் மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது .