நாட்டின் பல பக்கங்களில் இன்று மழை பெய்ய கூடிய சத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது .
குறிப்பாக மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் 75 மில்லி மீற்றர் அளவான மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு, வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஊவா மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .