நாட்டின் பல பாகங்களில் இன்று அநேகமாக சீரான வானிலை நிலவக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வழிமணடளவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுள்ளது.
அத்துடன் மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலையை எதிர்பார்க்கலாமெனவும் அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய சூரியன் வடக்கு திசை நோக்கி பயணம் செய்வதின் காரணத்தினால் இந்த வருடம் ஏப்பிரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 14 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.
மேலும் இன்றையதினம் மலை தெல்வத்தை, பத்தேகம, தெதியவல, முலட்டியன, அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் உடமலல ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.13 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.