நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மேல் மாகாணம், காலி, மாத்தறை மற்றும் கடற்கரையோர பகுதிகளில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் மாலை நேரத்தில் அல்லது இரவு நேரத்தில் ஊவா மாகாணத்தில் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
இதற்கமைய நாட்டில் ஏனைய பகுதிகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் வட மற்றும் வடமத்திய மாகாணங்களில் மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீற்றர் வரை வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.