கொவிட் 19 தாக்கத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் தற்போது நடைபெற்று வருகின்றது.
அதனடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கலச் சேவிதர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவில் இருந்து தரப்படும் அஸ்ரா செனேக்கா என்ற கொவிட் தடுப்பூசியே இவ்வாறு ஏற்றப்படவுள்ளது.
மேலும் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் அனைத்து சிறைச்சாலைகளிலும் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கு இன்று முதல் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமாத்திரமின்றி சுமார் ஐயாயிரத்து 100 சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கும் இந்த தடுப்பூசி ஏற்றப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்த்ர்த்துள்ளமை குறிப்பிடதக்கது.