கொழும்பு பொது நூலகம் பொது மக்கள் பாவனைக்காக இன்றுமுதல் மீண்டும் திறக்கப்படுகிறது.
இதன்படி இன்று காலை 9 மணி தொடக்கம் மாலை 3.30 மணி வரை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இரவல் வழங்கும் பகுதி மற்றும் உசாத்துணைப்பகுதி திறக்கப்பட்டுள்ளன.
அத்துடன் பத்திரிகை, கால அட்டவணை, சிறப்பு குறிப்பு, ஆய்வு மண்டபம், கொரியா மற்றும் குமாபல் நூலக பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தொடர்ந்து மூடிய நிலையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நூலகத்திற்க வருகைதரும் அனைவரும் சுகாதார நடைமுறைகளை பேணியவாறு நூலக வசதிகளை பெற்றுக்கொள்ளுமாறு நூலக அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.