இலங்கை முழுவதும் இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் காவற்துறை ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களையும் அலவத்துகொடை, வரக்காபொல மற்றும் அக்கரைப்பற்று ஆகிய காவற்துறை பிரிவுகளையும் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்ட காவற்துறை ஊரடங்கு சட்டம் மீண்டும் இன்று 8 மணிக்கு பிறப்பிக்கப்படவுள்ளது.
இன்றிரவு 8 மணிக்கு அமுல்ப்படுத்தப்படவுள்ள காவற்துறை ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணிக்கே தளர்த்தப்படவுள்ளது.
காவற்துறை அமுலிலுள்ள நேரங்களில் அனுமதியின்றி அநாவசியமாக நடமாடுபவர்கள் கைது செய்யப்படுவார்கள் காவற்துறை தலைமையகம் அறிவித்துள்ளது.
காவற்துறை அமுலிலுள்ள நேரங்களில் அனுமதியின்றி அநாவசியமாக நடமாடிய முப்பதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.