T24 Tamil Media
இலங்கை

இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 14 காவற்துறை அதிகாரிகள் உயிரிழப்பு.

வீதி விபத்து காரணமாக இந்த வருடத்தின் கடந்த மூன்று மாதங்களில் மாத்திரம் 14 காவற்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய குறித்த காலப்பகுதியில் வாகன விபத்துகளினால் 22 அதிகாரிகள் உயிரிழந்துள்ள நிலையில் 74 பேர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அத்துடன் கடந்த வருடத்தில் இடம்பெற்ற வாகன விபத்துகளில் 39 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததுடன், 394 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்

மேலும் 2019 ஆம் ஆண்டில் வீதிவிபத்துக்களால் 38 காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்ததுடன், 292 பேர் காயமடைந்துள்ளனர்.

இதற்கமைய புள்ளி விபரங்களின் அடிப்படியில் வீதிவிபத்துக்களால், கடந்த 2018 ஆம் ஆண்டிலேயே பெருமளவான காவல்துறை அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர்.

அந்த வருடத்தில் 44 காவற்துறை அதிகாரிகள் வீதி விபத்துக்களால் உயிரிழந்த அதேவேளை, மேலும் 321 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில் வீதி விபத்துக்களால் சராசரியாக நாளொன்றில் 8 பேர் உயிரிழப்பதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஹோர்ன் அடித்த பேருந்தின் சாரதி கைது!

T24 News Desk 3

ஹோமாகம கிரிக்கெட் நிர்மாணப்பணிகளை நிறுத்த தீர்மானம்.

T24 News Desk 1

ஹோட்டலின் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேக நபர்கள் கைது.

T24 News Desk 1

ஹோட்டலில் பணியாற்றிய 20 வயதான இளைஞன் திடீர் மரணம்.

T24 News Desk 4

ஹொரோயின் போதைப்பொருளுடன் இலங்கை படகொன்று கைப்பற்றப்பட்டுளது.

T24 News Desk 4

ஹொரனை பகுதியில் நரிகளின் அட்டகசம்! மக்கள் பாதிப்பு.

T24 News Desk 4

ஹொரனை – கொழும்பு வீதியில் நடைபெற்ற விபத்தில் தந்தை மற்றும் மகன் பரிதாபமாக பலி!

T24 News Desk 2

ஹொரவப்பொத்தானை- கபுகொல்லேவ பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்16 வயது இளைஞன் பலி.

T24 News Desk 4

ஹொரவபொத்தானை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் படுகாயம்!

T24 News Desk 3

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read more