கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் இந்தியாவின் பெங்களூரில் சிக்கித் தவித்த 164 இலங்கை மாணவர்கள் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இந்தியாவின் பெங்களூர் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் -1422 என்ற விமானம் மூலம் இன்று குறித்த மாணவர்கள் அனைவரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு அழைத்துவரப்பட்ட மாணவர்கள் விமான நிலையத்தில் கிருமி நீக்கம் செய்யப்பட்டு கொவிட் -19 அறிகுறிகள் உள்ளதா என்று சோதனைக்குட்படுத்தப்பட்டதன் பின் சிறப்பு பேருந்துகளில் இராணுவத்தினரால் தனிமைப்படுத்தலுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

