இந்தியாவின் மும்பை நகரில் தங்கியிருந்த 163 இலங்கை மாணவர்களுடன் சிறப்பு விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தியாவில் நிர்க்கதியாகியிருந்த 163 இலங்கை மாணவர்களை மீட்டு வருவதற்காக இந்தியா சென்ற சிறப்பு விமானம் இன்று பிற்பகல் 2.35 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்ததாக எமது விமானநிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
வருகைதந்த மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.