அரசாங்கம் இந்தியாவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து நடக்கக்கூடாது என முன்னணி பெளத்த தேரர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.
இதன்படி அரசாங்கத்தை அட்சிக்கு கொண்டுவர உழைத்த பெங்கமுவே நாலக்க தேரர், முருந்தெட்டுவே ஆனந்த தேரர் உள்ளிட்ட 10ற்கும் மேற்பட்ட தேரர்கள் இவ்வாறு அந்த கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
மேலும் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என அவர்கள் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.