நாட்டின் பல பகுதிகளில் அடுத்துவரும் சில நாட்களிலும் மழையுடனான வானிலை தன்மையில் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என காலநிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக காற்று சற்று அதிகரித்த வேகத்தில் வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடி, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்க்கும் பொருட்டு பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.