கடந்த அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் சிலர் சர்வதேச காவல்துறைக்கு வழங்கிய தவறான தகவல்களின் காரணமாகவே அப்போதைய மத்திய வங்கி ஆளுநர் அர்ஜூன் மகேந்திரனை நாட்டுக்கு அழைத்துவர முடியாமல் போனதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்விடயத்தை தெரிவிததுள்ளார்.