நாடாளவிய ரீதியில் அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 18 பேரும் நேற்று கைது செய்யப்பட்டதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்தனர்.
நாட்டில் ஊரடங்கு சட்டம்அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பொதுநிகழ்வுகள் ,மத ஸ்தலங்கள் ஆகியவற்றில் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆலய வழிபாடுகளில் பங்கேற்ற குற்றச்சாட்டில் குறித்த 18 பேரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.