அராலிதுறையடி இராணுவ முகாமில் கொவிட் 19 தனிமைப்படுத்தல் மக்களின் பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலாகும் என வடக்கு மாகாண சபை முள்ளாள் உறுப்பினர் சபா. குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த விடையம் தொடர்பாக இன்றையதினம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயை சபா.குகதாஸ் இவ் விடயத்தினை தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதமா 29ஆம் திகதிஅதிகாலை அராலித்துறையடி இராணுவ முகாமில் கொரோனா தனிமைப்படுத்தலுக்காக இராணுவத்தினர் சிலர் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியை அண்மித்து வாழும் மக்கள் பாரிய அச்சத்துடன் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து இராணுவ முகாம் முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை இன்று காலை 11 மணிவரை முன்னெடுத்துள்ளனர்.
உண்மையில் இந்த முகாம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 50 மீற்றர் பகுதியில் நெருக்கமான குடியிருப்புக்கள் உள்ளன அத்துடன் மீனவக்கிராமமாக இருப்பதால் துறைப் பகுதியூடாக மீன்பிடி தொழிலுக்கு பல தொழிலாளிகள் சென்று வருவதால் அவர்கள் பெரும் அச்சத்தை எதிர்நோக்கி உள்ளனர்.
சிறுவர்கள் முதியவர்கள் அதிகமாக வாழ்வதால் அக் கிராமத்தில் மேலும் அச்சநிலை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது. ஏற்கனவே நாளாந்த கூலித் தொழில்கள் பாதிக்கப்பட்டு உணவுப் பிர்ச்சினைக்காக போராடும் மக்கள் மீது அவ்வாறான செயற்ப்பாடுகள் மேலும் மன விரக்தியை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்கம் ,ஐனாதிபதி செயலகம், சுகாதாரத்துறை சார் அதிகாரிகள் போன்றோர் மக்களின் பாதுகாப்பில் உடனடியாக கவனத்தில் எடுக்க வேண்டும் என சபா. குகதாஸ் குறிப்பிட்டுள்ளார்.